பயத்தை விரட்ட வழிபட வேண்டிய தெய்வம் எது?

வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம் ஏதும் இருக்காது. தேவையற்ற பயத்தில் இருந்து தப்பிக்க வழிபடவேண்டிய தெய்வம் காளி. காளியை வழிபட்டால் பயம் பஞ்சாய் பறந்து விடும். தேவையற்ற பயமுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் காளிகோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

காளி கோயில் அருகில் இல்லையென்றால் துர்க்கையை வழிபடலாம். எலுமிச்சம்பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஓம் காளி என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை காளி அல்லது துர்க்கை முன் அமர்ந்து ஜெபியுங்கள். அந்த பழத்தைப் பிழிந்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து பிரசாதமாக அருந்துங்கள். நிச்சயம் பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.